நயன்தாராவின் அன்னபூரணி பட விவகாரத்தில் நயன்தாராவுக்கும், படக்குழுவினருக்கும் ஆதரவளிக்கும் வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அன்னபூரணி”. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ்-ல் இருந்து இப்படம் நீக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்காக பல தரப்பினரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.அதன்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இயக்குனரின் படைப்புச் சுதந்திரமும் சென்சார் செய்யப்படாமல் இல்லை. அத்தகைய சென்சார் செய்யப்பட்ட அன்னபூரணி படத்தை சில காரணங்களுக்காக ஓடிடி தளத்திலிருந்து நீக்கம் செய்வது திரைத்துறைக்கு நல்லதல்ல. ஒரு திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு அனுமதிப்பதும் அனுமதிக்காமல் போவதும் தணிக்கைக் குழுவின் அதிகாரம். ஓடிடியின் இந்த செயல்பாடு தணிக்கைக் குழுவின் அதிகாரத்திற்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது” என்று வெற்றிமாறன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.