Homeசெய்திகள்சினிமாசென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா... 10 நாட்களுக்கு கொண்டாட்டம்...

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா… 10 நாட்களுக்கு கொண்டாட்டம்…

-

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா தொடங்கி சுமார் 10 நாட்களுக்கு விமரிசையாக நடைபெற உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தொழில், வர்த்தகம், சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமின்றி சினிமாவுக்கும் ஒரு மூலதனமான நகரமாகும். கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் இன்று உள்ள சினிமா துறைக்கு முன்னோடியாகவும், சினிமா துறை வளரவும் முக்கிய காரணமாக இருந்த நகரம் சென்னை. ஊள்ளூர் சினிமா விழாக்களும், மாநில அளவிலான சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமன்றி தற்போது தலைநகர் சென்னையில் சர்வதசே அளவில் திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சுமார் 10 நாட்களுக்கு ஐரோப்பிய திரைப்பட விழா நடைபெற உள்ளது. ஐரோப்பிய யூனியன் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்து உள்ளது. அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஜ், எட்வரட் ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் 28 ஐரோப்பிய நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் 28 விருதுகளை வென்ற படங்கள் திரையிடப்படுகின்றன.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் ஐரோப்பிய பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், 18 பெண் இயக்குநர்களின் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில், தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ