Homeசெய்திகள்சினிமாகார்த்தி 27 படத்தின் டைட்டில் இதுவா?

கார்த்தி 27 படத்தின் டைட்டில் இதுவா?

-

- Advertisement -

கார்த்தி 27 படத்தின் டைட்டில் இதுவா?ஜப்பான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி தற்போது, “96” படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 படத்தில் நடித்து வருகிறார். மதுரை மற்றும் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. பின்னர் திடீரென்று கார்த்தி வெளிநாடு சென்று விட்டதால் படத்தின் படப்பிடிப்புகள் தாமதமாக நடத்தும் நிலை ஏற்பட்டது. மீண்டும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இறுதியாக கார்த்தி நடித்திருந்த ஜப்பான் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே நிச்சயம் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் கார்த்தி.கார்த்தி 27 படத்தின் டைட்டில் இதுவா? இந்நிலையில் கார்த்தியின் 27 வது படமான இந்த புதிய படத்திற்கு “மெய் அழகன்” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த தலைப்பு அவ்வளவு நல்ல தலைப்பாக இல்லையே என்று புலம்பி வருகின்றனர்.அதே சமயம் மற்றொருபுறம் படத்தின் தலைப்பு தூய தமிழில் அழகாக உள்ளது எனவும் நிச்சயம் கன்டென்ட் ஸ்ட்ராங்காக இருந்தால் தலைப்பு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.”96″ திரைப்படம் ஒரு மெலோடி வகை காதல் படம். அதேபோல கார்த்தியின் இந்த படமும் மெலோடியான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ