Homeசெய்திகள்சினிமாவாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் - மனம் திறந்து பேசிய சமந்தா

வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவுகள் – மனம் திறந்து பேசிய சமந்தா

-

இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான அவர், மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார். தமிழில் உச்சம் தொட்ட அதே நேரத்தில் தெலுங்கிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார்.

இவர் கடைசியாக யசோதா திரைப்படத்திலும் குஷி திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டா சமந்தா கூட்டணியில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் ‘சிட்டாடெல்’ இணைய தொடரில் நடித்து வருகிறார். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இடையே தனது உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்கும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் மறைமுகமாக நாகசைதன்யாவை சாடியிருப்பார். அதில், எனது வாழ்வில் எடுத்த பலமுடிவுகள் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது. இத்தனை காலம் எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட மறந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

MUST READ