Homeசெய்திகள்சினிமாவசூலை வாரிக் குவிக்கும் மோகன்லாலின் 'நேரு'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?

வசூலை வாரிக் குவிக்கும் மோகன்லாலின் ‘நேரு’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

வசூலை வாரிக் குவிக்கும் மோகன்லாலின் 'நேரு'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகரான மோகன்லால் நடிப்பில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வெளியான படம் நேரு. இந்த படத்தை த்ரிஷ்யம் 1, த்ரிஷ்யம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். த்ரிஷ்யம் 1 மற்றும் 2 படங்கள் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில், இந்த நேரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக நேரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. இது குறித்து அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நேரு படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வசூலை வாரிக் குவிக்கும் மோகன்லாலின் 'நேரு'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?

மேலும் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விஷ்ணு சியாம் இசையமைத்துள்ளார் சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மோகன் லால் உடன் இணைந்து ப்ரியாமணி, அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ