நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, ஹீரோவாக நடித்து வருகிறார். அதே சமயம் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் சூரி, புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுத, துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இதில் சூரி உடன் இணைந்து சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கருடன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படம் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
Hold onto your excitement! 💥 Unveiling the first look and title of my next , directed by @Dir_dsk tomorrow at 5 PM 🦅🕔
An @thisisysr musical
A #VetriMaaran story@SasikumarDir @Iamunnimukundan @RevathySharma2 @SshivadaOffcl @Roshni_offl @thondankani @mimegopi… pic.twitter.com/ja4uVNkT8Z— Actor Soori (@sooriofficial) January 18, 2024
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் கிளிம்ஸ் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதைத்தவிர நடிகர் சூரி கொட்டுக்காளி ,ஏழு கடல் ஏழு மலை போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.