Homeசெய்திகள்சினிமா'நான் உங்களுக்காக இருக்கிறேன்'..... கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!

‘நான் உங்களுக்காக இருக்கிறேன்’….. கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!

-

- Advertisement -

'நான் உங்களுக்காக இருக்கிறேன்'..... கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும், திரை பிரபலங்களும் இன்று வரையிலும் மீள முடியாத துயரத்தில் இருந்து வருகின்றனர். அதேசமயம் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் இருக்க நினைவேந்தல் கூட்டம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கமல்,ரஜினி, ராதாரவி, சரத்குமார், சந்திரசேகர், விஷால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியின் மேடையில் விஜயகாந்தின் நினைவுகள் குறித்தும், விஜயகாந்த்துக்கு புகழாரம் சூட்டியும் பேசினர். 'நான் உங்களுக்காக இருக்கிறேன்'..... கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!அப்போது பேசிய விஷால், ” திரைத் துறையில் நீங்கள் வளர்வதற்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். சினிமா துறையில் உங்களுடன் எந்த ரோலில் வேண்டுமானாலும் நடிக்க தயார். நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன்” இன்று விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகிய இருவருக்கும் தோள் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியா ரோலாக இருந்தாலும் நடிக்க தயார் என்று அவருக்கு உதவும் வகையில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ