Homeசெய்திகள்சினிமாஎச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு..... விரைவில் தொடங்கும் ஷூட்டிங்!

எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு….. விரைவில் தொடங்கும் ஷூட்டிங்!

-

- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு..... விரைவில் தொடங்கும் ஷூட்டிங்!இயக்குனர் எச். வினோத் கடந்த 2014 இல் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இவர் கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். KH233 என்று தற்காலிகமாக தடைபடப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியானது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. கமல்ஹாசன், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு எச். வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் எச்.வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் இரண்டு படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு..... விரைவில் தொடங்கும் ஷூட்டிங்! ஆனால் எச்.வினோத் தற்போது யோகி பாபு நடிப்பில், குறைவான பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்த படம் தொடர்பான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல், காமெடி கலந்த கதை களத்தில் உருவாக உள்ள இந்த படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் யோகி பாபுவும் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ