ஸ்ரீரங்கத்தில் பிரதமர் வாகன பேரணியாகச் சென்ற நிலையில், பா.ஜ.க.வினர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
‘தன்னலமில்லாதவர், தைரியமானவர்’…. குட் பை கேப்டன்….நினைவேந்தல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய கமல்!
மூன்று நாள் சுற்றுப்பயணமாக, நேற்று (ஜன.19) மாலை 05.00 மணிக்கு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர், ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
இரவு ஆளுநர் மாளிகையிலேயே தங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜன.20) காலை 09.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் விமான நிலையத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர்கள், திருச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திரிஷா, நயன்தாரா வழியில் அதிதி சங்கர்…. வெளியான புதிய தகவல்!
பின்னர் கார் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காரின் கதவைத் திறந்து நின்றபடி, பா.ஜ.க.வினர் மற்றும் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். வாகனப் பேரணியாக சாலையில் சென்ற பிரதமருக்கு சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த பா.ஜ.க.வினர் மலர்களைத் தூவியும், ஜெய் ஸ்ரீராம் போன்ற முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்று பிரதமர் நரேந்திர மோடி, ரங்கநாதரை வழிபட்டு வருகிறார்.