Homeசெய்திகள்சினிமாதுபாயை ஆட்டம் போட வைக்க போகிறார் விஜய் ஆண்டனி!

துபாயை ஆட்டம் போட வைக்க போகிறார் விஜய் ஆண்டனி!

-

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி துபாயில் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துபாயை ஆட்டம் போட வைக்க போகும் விஜய் ஆண்டனி!பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இவருடைய டியூன்கள் ஒரு தனி ரகமாகவே கொண்டாடப்படுகிறது. குறிப்பாக குத்துப்பாட்டு என்று வந்துவிட்டால் மனுஷன் இறங்கி செய்வார். அதே நேரம் மெலோடி வேண்டும் என்றாலும் உருக வைத்து விடுவார். இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராகி பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் வெளியானது. மேலும் விஜய் ஆண்டனி வள்ளிமயில், ஹிட்லர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி அவ்வப்போது லைவ் கான்செர்ட்களை நடத்தி ரசிகர்களை எப்போதும் மியூசிக்கல் வைபிள் இருக்கும் படியே வைத்திருப்பார். அந்த வகையில் அடுத்ததாக விஜய் ஆண்டனியின் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. வரும் மார்ச் மாதம் 2ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை விஜய் ஆண்டனி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சவுண்ட் பாக்ஸ் ஈவண்ட்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்கிறது.

MUST READ