Homeசெய்திகள்உலகம்சைபர் தாக்குதல்கள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் அதிர்ச்சி!

சைபர் தாக்குதல்கள் – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையால் அதிர்ச்சி!

-

- Advertisement -

 

சைபர் தாக்குதல்கள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் அதிர்ச்சி!

உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தப்படும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ். அமெரிக்கா நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் என்கின்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

சிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

தனது நிறுவனத்தின் பாதுகாப்புக் கட்டமைப்புகள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நேற்று (ஜன.19) அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், உலகளாவிய சைபர் தாக்குதல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த ஜனவரி 12- ஆம் தேதி ரஷ்ய அரசின் ஆதரவுடன் செயல்படும் ஹேக்கர் குழு,எங்கள் நிறுவனத்தின் மென்பொருள் கட்டுமானத்திற்கு உள்ளே அத்துமீறி அதில் இருந்த தகவல்கள் ஹேக் செய்ததுடன், பல மின்னஞ்சல் முகவரிகளையும், பணியாளர்களின் கோப்புகளையும் திருடியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

மென்பொருள் கட்டமைப்பில் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றால் அது குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ