Homeசெய்திகள்சினிமாஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

ஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

-

ஜனவரி 25 இல் வெளியாகும் படங்கள்

மலைக்கோட்டை வாலிபன்

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை லிஜோ ஜோஸ் பெலிசெரி இயக்கியுள்ளார். இதில் மோகன்லாலுடன் இணைந்து ஹரிஷ் பேரடி, சோனாலி குல்கர்னி மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! பிரசாந்த் பிள்ளை இந்த படத்திற்கு இசையமைக்க ஜான் & மேரி கிரியேட்டிவ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் அதை தொடர்ந்து டிரைலரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

சிங்கப்பூர் சலூன்

ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் சத்யராஜ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ், ஜீவா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். ஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். விவேக் சிவா இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ப்ளூ ஸ்டார்

அசோக் செல்வன் மற்றும் சாந்தனு கூட்டணியில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!எஸ் ஜெயக்குமார் படத்தை இயக்க கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

தூக்கு துரை

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் தூக்கு துரை. இந்த படத்தில் யோகிபாபு உடன் இணைந்து இனியா, மொட்ட ராஜேந்திரன், சென்ட்ராயன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஜனவரி 25 இல் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! இந்த படத்தை திரைப்படம் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

MUST READ