தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் எனப்படுபவர் நயன்தாரா. 2005 இல் வெளியான ஐயா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இன்றுவரை டாப் ஹீரோயினாக நடித்து வருகிறார். பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் இவர் நடித்து வெளியான பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது. அதேசமயம் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷாவின் மார்க்கெட் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஏறுமுகமாக உள்ளது. நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து வருவதனால் கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.இந்நிலையில் பிரபல இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அதன்படி இது சம்மந்தமாக நயன்தாராவை அணுகிய போது இந்த படத்தில் நயன்தாராவிற்கு திருப்தி இல்லை என்பதனால் படத்தில் நடிக்க மாட்டேன் எனக்கு ஒரு நிராகரித்து விட்டாராம். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் விமர்சனரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் ஓடிடி யில் வெளியான லேபிள் வெப் சீரிஸ் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. எனவே இத்தகைய சமயத்தில் அருண்ராஜ் காமராஜ் படத்தின் கதைக்கு நயன்தாரா நோ சொல்லி இருப்பதும் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
- Advertisement -