புனே திரைப்பட விழாவில் இடி முழக்கம் படம்…. ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி
- Advertisement -
கோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஜிவி பிரகாஷ், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அவரது இசையில் வெளியான வெயிலோடு விளையாடி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. இன்று வரை கிராமங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் அது. இதைத்தொடர்ந்து விஜய், கார்த்தி, சூர்யா, என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். மேலும், பாடல்களும் பாடி உள்ளார்.
இசை ஒரு பக்கம் இருக்க, நடிப்பிலும் ஜிவி பிரகாஷ் ஆர்வம் செலுத்தி வருகிறார். டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக அடியே என்ற படம் வெளியானது. அடுத்து கள்வன், ரிபெல் ஆகிய படங்கள் வௌியீட்டுக்கு தயாராகி வருகின்றன. அவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் இடி முழக்கம். சீனு ராமசாமி படத்தை இயக்கி உள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி ஷங்கர் நடித்துள்ளார்.
சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புனே திரைப்பட விழாவில் இடிமுழக்கம் திரைப்படம், இந்திய திரைப்பட பிரிவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உள்பட ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.