Homeசெய்திகள்சினிமாஹிட்லர் திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட்

ஹிட்லர் திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட்

-

நடிகர், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என பல முகங்கள் பன்முகத் தன்மை கொண்டவர் விஜய்ஆண்டனி. அவரது இசையில் 2000 ஆரம்பத்தில் வௌியான அனைத்து பாடல்களும் படுஹிட் என்று தான் சொல்ல வேண்டும். அவரது இசையில் வெளியாகும் குத்துப் பாடல்கள் அனைத்து பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இசையமைப்பாளராக வெற்றி கண்ட விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிப்பில் இறங்கினார். நான் என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரது திரை பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அவரது நடிப்பில் வெளியான ரத்தம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் தவிர மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

தற்போது, விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ஹிட்லர். செந்தூர் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படைவீரன், வானம் கொட்டட்டும், ஆகிய படங்களை இயக்கிய தனா இயக்கி உள்ளார். இதில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கவுதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிடோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது படத்தின் முதல் பாடல் வரும் 25-ம் தேதி வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ