Homeசெய்திகள்சினிமாபடமாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை... சேரன் இயக்கம்...

படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை… சேரன் இயக்கம்…

-

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கையை சேரன் படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்பா பாசம், காதல், நட்பு என அனைத்து கோணத்திலும் மிகச்சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி சிறப்பு நடிகரும், இயக்குநருமான சேரனுக்கு உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். ஒரு திரைக்கதையை காவியமாக மாற்றி திரைக்கு கொண்டு வரும் அற்புத இயக்குநர் சேரன். கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சேரன், பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் திரைத்துறைக்கு இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து பொற்காலம், ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இதில் ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். கடந்த 2019-ல் வெளியான திருமணம் என்ற திரைப்படத்தை இவர் கடைசியாக இயக்கி இருந்தார். பிக் பாஸ் சீசன் 3யிலும் பங்கேற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் குடிமகன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கலையரசன், பிரசன்னா, ஆரி, திவ்யா ஆகியோரை வைத்து ஜர்னி என்ற தொடரை இயக்கி வருகிறார். இது விரைவில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கையை சேரன் படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சரத்குமார் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ