சிம்புவுடன் இணையும் அக்கட தேசத்து நடிகை
சிம்பு நடிக்கும் 48-வது படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தற்போது கதாநாயகி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
காதல், சோகம், தோல்வி, உடல் பருமன் என சிக்கல்களையும், விமர்சனங்களையும் சந்தித்தவர் நடிகர் சிம்பு. தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. அதோடு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை என நீண்ட நாட்களாக சிம்பு படப்பிடிப்புக்கும், படத்திற்கும் முழுக்கு போட்டார். இதையடுத்து, மாநாடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை சிம்பு தொடங்கி உள்ளார். அடுத்தடுத்து, வெந்து தணிந்தது காடு, பத்துதல ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன
தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார். பான் இந்திய அளவில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவர இருக்கிறது.
வரலாற்றுத்திரைப்படம் என்பதால் மிகவும் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.