Homeசெய்திகள்சினிமாவிஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

-

கோலிவுட்டின் தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் தற்போது தி கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிப்பு மட்டுமன்றி மக்கள் சேவைகளிலும், அரசியலிலும் முனைப்பு காட்டி வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் என்று தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார். மேலும், சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்டு உணவு, உடை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

MUST READ