Homeசெய்திகள்சினிமாவெற்றி எனும் வார்த்தைக்கு 5,000 நாட்கள் கடந்தன... நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு...

வெற்றி எனும் வார்த்தைக்கு 5,000 நாட்கள் கடந்தன… நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு…

-

சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றும் வரும் நிலையில், நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

கோலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ். தனது தந்தை நடித்த வெட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சாந்தனு. தொடர்ந்து 2008-ம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். யுவராஜ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். முதல் படத்திலேயே முக்கால்வாசி கோலிவுட் ரசிகைகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் சாந்தனு. தொடர்ந்து, சித்து பிளஸ்டூ, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம், வாய்மை ஆகிய திரைப்படங்களில் சாந்தனு நடித்தார்.

இத்திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன. இடைவெளிக்கு பிறகு கடந்த 2020-ம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் அவர் இணைந்து நடித்த வானம் கொட்டட்டும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பாவ கதைகள் படத்திலும், குரு படத்திலும் நடித்தார். அடுத்து கசட தபற, முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் நடித்தார். இறுதியாக சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் ராவண கோட்டம்.

தற்போது ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வனுடன் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்றபடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிட்ட சாந்தனு, மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்ளது. வெற்றி என்ற வார்த்தையை சொல்ல எனக்கு 15 ஆண்டுகள் 4 மாதங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 600 நாட்கள் ஆகியிருக்கின்றன. இது உங்களால் கிடைத்தது தான். உங்களின் தொடர் ஆதரவு என்னை இத்தனை ஆண்டுகளாக சோர்வடையாமல் ஓடவைத்துள்ளது. நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ