Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

-

 

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 421 ரன்களைக் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜெய்ஷ்வால் 80 ரன்களை எடுத்த நிலையில், ஜோரோட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

லாலுவின் புதிய வியூகம்- பீகார் அரசியலில் பரபரப்பு!

சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறப்பாக விளையாடி ரன்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 86 ரன்களில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.

பின்னர் களம் கண்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் பரத் ஆகியோர் சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினர். பரத் 41 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகினார். பின்னர், ஜடேஜா உடன் இணைந்த அக்ஷர் படேல் மிகவும் சிறப்பாக விளையாடினார். இந்த இணை இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்தை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தது.

தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை பெறுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்தது. ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

MUST READ