தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இதில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப் பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலில் நுழையும் உரிமை சம்பந்தமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பிரிட்டிஷ் காலகட்டத்தில் கோயில் நுழைவுப் போராட்டம், அவற்றிற்கு எதிரான புரட்சி என அனைத்தும் இன்றைய காலகட்டத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக அமைந்திருந்தது. கேப்டன் மில்லர் படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் வசூலில் சரியத் தொடங்கி விட்டன என்றும் கூறப்படுகிறது. மேலும் நேற்றைய முன் தினம் இப்படம் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படமானது தற்போது வரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை பட குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -