கடந்த 2013 ஆம் ஆண்டு கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளியான படம் ஜன்னல் ஓரம். இந்த படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் விமல் மற்றும் பார்த்திபன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் எனும் திரைப்படத்திலும் விதார்த், பூர்ணா கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக சவரக்கத்தி பட இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள டெவில் படத்தில் விதார்த், பூர்ணா இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க மிஸ்கின் இதற்கு இசையமைத்துள்ளார். மேலும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவிலும் எஸ் இளையராஜாவின் எடிட்டிங்கிலும் இப்படம் உருவாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
#DEVIL New Promo🖤✨
Stars : Vidharth – Shamna Kasim (Poorna) – Aadith Arun – Mysskin
Music : Mysskin (Debut)
Direction : Aathithyaa (Savarakathi)FEBRUARY 2 2024 Release!!pic.twitter.com/FhxMiYyIDG
— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 27, 2024
மேலும் படம் வருகின்ற பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் புதிய புரோமோ வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம் பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் இந்த படத்தின் மூலம்தான் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.