Homeசெய்திகள்சினிமாரீ-ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் பில்லா!

ரீ-ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் பில்லா!

-

ரீ-ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் பில்லா!கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான படம் பில்லா. ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்காக சிறு மாறுதல்களுடன் இப்படம் வெளியானது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இதில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, நமீதா, பிரபு, ரஹ்மான், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரீ-ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் பில்லா!அந்த வகையில் 18 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பில்லா படம் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து வெளியான பில்லா 2 படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்படம் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, சூர்யாவின் வாரணம் ஆயிரம், தனுஷின் 3 உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, முதல் முறை ரிலீஸ் செய்யப்படும் போது எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ, அதேபோன்ற வரவேற்பு ரசிகர்கள் தந்தது மட்டும் அல்லாமல் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ