சவரக்கத்தி பட இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டெவில். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, மிஷ்கின், சுபாஸ்ரீ, த்ரிகுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசை அமைத்துள்ளார். எஸ் இளையராஜா இந்த படத்திற்கு எடிட்டிங் பணிகளை கவனிக்க கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் டெவில் படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் விதார்த், நடிகை பூர்ணா, இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மிஷ்கின், “பூர்ணா மிகவும் நல்லவர். ஒரு தாயைப் போன்று என்னை பார்த்துக் கொள்வார். ஆகவே அடுத்த ஜென்மத்தில் பூர்ணாவுக்கு மகனாக பிறக்க வேண்டும். கடைசி வரை அவர் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னுடைய எல்லா படங்களிலும் இனி பூர்ணா நடிப்பார்” என்று கூறியிருந்தார்.
மிஷ்கின், பூர்ணா குறித்து பேசியது தொடர்பாக, சிலர் பூர்ணா , மிஸ்கினுக்கு எந்த அளவில் அன்பு கொடுத்திருந்தால் அவர் ஒரு மேடையில் இப்படி அவரை உயர்வாக பேசுவார் என்று ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்து வந்தாலும், இன்னொரு பக்கம் மிஷ்கின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை என்றும், இதுக்கு ஒரு எண்ட் கார்டே கிடையாதா? என்றும் மிஸ்கினை கலாய்த்து வருகின்றனர்.