Homeசெய்திகள்சினிமாஅடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்?.....அவரே சொன்ன பதில்!

அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்?…..அவரே சொன்ன பதில்!

-

அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்?.....அவரே சொன்ன பதில்!கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதைத்தொடர்ந்து தேவி, நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார் வனிதா விஜயகுமார்.அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்?.....அவரே சொன்ன பதில்!

இதற்கிடையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரைப் பிரிந்த வனிதா விஜயகுமார், ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் விஷுவல் எபெக்ட் டெக்னீசியன் ஆன பீட்டர் பால் என்பவரை மணந்து கொண்ட வனிதா விஜயகுமார் ஒரு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து சென்றார். அதைத் தொடர்ந்து படங்களிலும் யூட்யூப் சேனலிலும் கவனம் செலுத்தி வரும் வனிதா விஜயகுமார் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த திருமணம் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்?.....அவரே சொன்ன பதில்!அதற்கு வனிதா விஜயகுமார், தான் சட்டப்படி இரண்டு திருமணங்கள் தான் செய்திருப்பதாகவும் மூன்றாவது முறையும் திருமணம் செய்வேன் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் மாப்பிள்ளை கருப்பாக இருக்க வேண்டுமா? சிவப்பாக இருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வனிதா விஜயகுமார், மாப்பிள்ளை குபேரனை போல பச்சையாக இருக்க வேண்டும் எனவும் அப்படி ஒருவரை தான் தேடிக் கொண்டிருப்பதாகவும் பதில் அளித்தார். அது மட்டும் இல்லாமல் எப்போது பேட்டி எடுத்தாலும் திருமணம் குறித்த கேள்விகள் தான் கேட்பீர்களா? என்று கோபமாக பேசினார்.

MUST READ