முதலில் 200 மில்லி லிட்டர் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு தேக்கரண்டி ஓமம், 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் , ஒரு சிட்டிகை கற்பூர பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்தத் தண்ணீரில் கொடுக்கப்பட்டுள்ள அளவில் ஓமம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் வடிகட்டிய நீரில் கற்பூர பொடியினை சேர்த்து கலக்க வேண்டும். இக்கலவையை இளஞ்சூட்டில் இருக்கும் போதே வலியுள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதினால் உடல் வலி குறைவதை காணலாம்.
மேலும் மசாஜ் செய்த பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். மாலை நேரத்தில் இம்முறையை பின்பற்றினால் உடல் வலி ஏதும் இன்றி நிம்மதியாக தூங்கலாம்.
இருப்பினும் இம்முறையை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.