Homeசெய்திகள்சினிமாசொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

-

சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து மதுரவீரன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு படை தலைவன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வால்டர் பட இயக்குனர் அன்பு இயக்குகிறார். இதில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர், கஸ்தூரிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைஞானி இளையராஜா இதற்கு இசையமைக்கிறார். காட்டு யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.சொன்ன மாதிரியே சண்முக பாண்டியன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்!

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் உயர்ந்த நிலையை அடைய எத்தகைய உதவி வேண்டுமானாலும் செய்வேன். அதேசமயம் கேமியோ ரோலில் கூட நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி ராகவா லாரன்ஸ் தற்போது சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்கள் முன்னேற்றம் அடைய நடிகர் விஜயகாந்த் சம்பளம் வாங்காமல் கூட நடித்துக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ