ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மத பேதமின்றி அனைவராலும் நல்லிணக்க உறுதிமொழி ஏற்க்கப்பட்டது
ஆவடி மாநகராட்சி அருகில் கலைஞர் திடலில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்களின் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி.
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மதசார்பற்ற நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மத பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். இதில் பேசிய திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள், நம் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் கூறினார்.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவர் RSS ஐ சேர்ந்தவர் என்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரிட்டேன் நாட்டிற்கு தலைவராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் காந்தியை பார்த்து” என் பீரங்கியும் என் தோட்டாக்களும் யாருக்கும் தலை வணங்கியதில்லை ஆனால் காந்தியின் அகிம்சை போராட்டத்திற்கு தலை வணங்கியது என கூறியிருக்கிறார். அத்தகைய தலைவரை பார்த்து மக்களால் நியமிக்கப்படாத நியமன ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தன்னை பற்றி ஊடகங்களில் செய்தி வரவேண்டும் என்பதற்காக ஏதோ ஒன்று பேச வேண்டும் என்று இத்தகைய செயல்களை செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்தார்..
அதேபோல் அம்பத்தூர் பகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் மத போதகர், இந்து மதகுருக்கள் இஸ்லாமியர்கள் என பாகுபாடு இன்றி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்று கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி பகுதியிலும் மற்றும் அம்பத்தூர் பகுதியிலும்,மண்டல குழு தலைவர்கள்,கட்சி நிர்வாகிகள், மற்றும் அனைத்து மதத்தைச் சார்ந்த பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.