Homeசெய்திகள்சினிமாலண்டன் செல்லும் விஷால்... எந்த படத்திற்கு தெரியுமா?

லண்டன் செல்லும் விஷால்… எந்த படத்திற்கு தெரியுமா?

-

- Advertisement -
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அவர் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகம் ஆகினார். இதைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் சண்டக்கோழி. இத்திரைப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாகா கோலிருட் திரையுலகில் முன்னிறுத்தியது. இத்திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

இறுதியாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வசூல் வேட்டை நடத்தியது. இதைத் தொடர்ந்து விஷால் ஹரி இயக்கும் ரத்னம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு அடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விஷால் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, சிம்ரன், வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குவதாக அவர் அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்காக விஷால் லண்டன் செல்கிறார். லொகேஷன் முடிவு ஆனதும், வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை தொடங்குவதாக கூறப்படுகிறது.

MUST READ