Homeசெய்திகள்சினிமாஹை பட்ஜெட்டில் உருவாகும் ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை 2'!

ஹை பட்ஜெட்டில் உருவாகும் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை 2’!

-

- Advertisement -

ஹை பட்ஜெட்டில் உருவாகும் ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை 2'!கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், சபீர் கல்லாரக்கல், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் நடிகர் ஆர்யாவிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, ஆர்யாவின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்தது. குத்துச்சண்டை விளையாட்டில் உள்ள அரசியல் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையிலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது.ஹை பட்ஜெட்டில் உருவாகும் ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை 2'!

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் ஆர்யா, சார்பட்டா பரம்பரை 2 படம் விரைவில் உருவாக இருப்பதாகவும், அது இன்னும் வெறித்தனமாக இருக்கும் என்றும் அப்டேட் கொடுத்திருந்தார். தற்போது அதற்காக தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் ஆர்யா. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்த மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சார்பட்டா பரம்பரை 2 படமானது 90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஹை பட்ஜெட்டில் உருவாகும் ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை 2'!எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான முதல் பாகத்திற்கு கிடைத்த பேராதரவினால் இரண்டாம் பாகத்தை ஹை பட்ஜெட்டில் உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ