அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு பான் இந்திய அளவில் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் பகத் பாஸில் வில்லனாக மிரட்டி இருந்தார். இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி இருந்த இப்படம் நாடு முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் புஷ்பா படம், அல்லு அர்ஜுனுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை பெற்று தந்தது மட்டும் அல்லாமல் தேசிய விருதையும் பெற்று தந்தது.
இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் புஷ்பா 2 (புஷ்பா தி ரைஸ் ) படம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புஷ்பா 2 படமானது 2024 டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியானால் தான் இதற்கான விடை கிடைக்கும்.
இருந்த போதிலும் பட குழுவினர் சமீபத்தில் புஷ்பா 2 ரிலீஸ் ஆவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.