சின்னத்திரையிலிருந்து வௌ்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நாயகன் சந்தானம். தொடக்கத்தில் நகைச்சுவை நாயகனாக கூட இல்லாமல், குணச்சித்திர வேடங்களில் சந்தானம் நடித்து வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த முன்னணி நகைச்சுவை கலைஞகராக உருவெடுத்தார். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கார்த்தி, உதயநிதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சந்தானம் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் சந்தானம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
இதைத் தொடர்ந்து, இனிமே இப்படித்தான், சக்கப்போடு போடுராஜா, ஏ1, தில்லுக்கு துட்டு, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ்ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இறுதியாக சந்தானம் நடிப்பில் கிக், டிடி ரிட்டர்ன்ஸ் , 80ஸ் பில்டப் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. டிக்கிலோனா பட இயக்குநர் கார்த்திக் யோகி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு யு சான்றிதழ் தணிக்கைக் குழு வழங்கி உள்ளது. இத்திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. மொத்தம் 600-க்கும் மேற்பட்ட திரைகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.