Homeசெய்திகள்சினிமாஸ்ரீதிவ்யா எடுத்துக் கொண்ட சபதம்... பின்னணி இது தானா?

ஸ்ரீதிவ்யா எடுத்துக் கொண்ட சபதம்… பின்னணி இது தானா?

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் குறுகிய காலத்திலேயே முதல் இடத்தை பிடித்துவிட்டு, அந்த இடத்திலிருந்து மீண்டும் விலகிப்போன நடிகை ஸ்ரீ திவ்யா. ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ஸ்ரீ திவ்யா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து, ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, பென்சில், ஏத்தி, மருது ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

மருது படத்திற்கு பிறகு ஸ்ரீ திவ்யா சினிமாவிலிருந்து விலகினார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் குறையக் காரணம் உள்ளது. நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டு விழாவில் பங்கேற்ற திவ்யா, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நடனம் ஆடியிருக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. குடிபோதை சர்ச்சையால் பட வாய்ப்பு இல்லாமல் போனதை நினைத்து வருத்தப்படும் ஸ்ரீ திவ்யா, கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என்று சபதம் எடுத்துள்ளாராம். நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் பிரபு நடித்த ரெய்டு படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீ திவ்யா.

MUST READ