பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தையொட்டி, தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது.
ரிலீஸ் தேதியை அறிவித்தது பேமிலி ஸ்டார் படக்குழு
முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவுத் தினத்தையொட்டி, தி.மு.க.வினரின் அமைதி பேரணி இன்று (பிப்.03) காலை 08.15 மணிக்கு சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலை அரசினர் விடுதியில் இருந்து தொடங்கியுள்ளது.
காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி நடைபெறவுள்ளது. தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்று வரும் பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோடிக்கணக்கில் இழப்பு… சொந்த வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா சோப்ரா…
அண்ணா நினைவிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான நிர்வாகிகள் மலர்தூவி மரியாதைச் செலுத்தவுள்ளனர்.