நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படத்திலும், மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இதற்கிடையில் தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கிள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் ஆகியோரின் கூட்டணி VJS 51 படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி நடித்துள்ளார். காதல் காமெடி ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை 7Cஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட இந்த படம், கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்திற்கு சத்தியமா பொய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.