Homeசெய்திகள்சினிமா'நான் உயிருடன் தான் இருக்கிறேன்'.... வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!

‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’…. வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!

-

'நான் உயிருடன் தான் இருக்கிறேன்'.... வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் நேற்று உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் தற்போது தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் பூனம் பாண்டே.

மாடல் அழகியாகவும் கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாஷா என்ற படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் பல சர்ச்சைகளை சந்தித்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக காதலர் ஒருவரை அறிமுகப்படுத்தி அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.'நான் உயிருடன் தான் இருக்கிறேன்'.... வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே! அதன் பின்னர் அந்த காதலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகார் அளித்தார். இந்நிலையில் தான் நேற்று கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்திருந்த நிலையில் பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தனர். இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் தற்போது பூனம் பாண்டே, தான் உயிருடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கர்ப்பப்பை புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்த தான் இது போன்ற நாடகம் ஆடியதாக கூறியிருக்கிறார். இது குறித்து பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்த இதுதான் வழியா? என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ