குட் நைட் பட கூட்டணியில் உருவாகும் ‘லவ்வர்‘ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் மற்றும் சூர்யா ஆகியோரின் கூட்டணியில் வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தில் நடிகர் மணிகண்டன், ராசாக்கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் மணிகண்டன் குட் நைட் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்த இந்த படம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அடுத்ததாக மணிகண்டன், பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.