Homeசெய்திகள்சினிமாமகேஷ் பாபுவின் 'குண்டூர் காரம்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபுவின் 'குண்டூர் காரம்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!அலா வைகுந்த புரமுலு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் தான் குண்டூர் காரம். மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி இருந்த இப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருந்தார். மேலும் மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ஹாரிக்கா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு தமன் இசை அமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவியான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மகேஷ் பாபுவின் 'குண்டூர் காரம்'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!அந்த வகையில் இந்த படம் வெளியான முதல் நாளில் 94 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து நல்ல வசூலை பெற்று தந்த நிலையில் குண்டூர் காரம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ