Homeசெய்திகள்சினிமாபூனம் பாண்டேவுக்கு வலுக்கும் கண்டனம்... வழக்கு பதிய வலியுறுத்தல்....

பூனம் பாண்டேவுக்கு வலுக்கும் கண்டனம்… வழக்கு பதிய வலியுறுத்தல்….

-

- Advertisement -
இறந்துவிட்டதாகவும், பின்னர் நலமுடன் இருப்பதாகவும் மாறி மாறி சமூக வலைதளங்களில் குழப்பத்தை ஏற்படுத்திய நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக வலம் வருவேன் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்செய்தியின் மூலம்தான் பூனம் பாண்டே இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியவர் நடிகை பூனம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர், தனது காதலரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அவர் மீது புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். இதன்பிறகு தனக்கென தனி இணையதளத்தை ஏற்படுத்தி அதில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று, தான் நலமுடன் இருப்பதாகவும், புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ததான் அவ்வாறு பதிவிடப்பட்டதாகவும் பதிவிடப்பட்டது. இதனால், பொய் செய்தியை பரப்பி சமூக வலைதளங்களில் நாடகமாடிய பூனம் பாண்டே மீது வழக்குப்பதிந்து அவரை சிறைக்கு அனுப்ப இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். பூனம் பாண்டேவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

MUST READ