Homeசெய்திகள்சினிமாமம்மூட்டி நடிப்பில் பிரம்மயுகம்... கருப்பு - வெள்ளை வடிவில் வெளியீடு...

மம்மூட்டி நடிப்பில் பிரம்மயுகம்… கருப்பு – வெள்ளை வடிவில் வெளியீடு…

-

- Advertisement -
மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மயுகம் திரைப்படம் முழுக்க முழுக்க கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மோலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நாயகன் மம்மூட்டி. மலையாள ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் மம்மூக்கா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கன்னூர் ஸ்குவாட். கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் பிரம்மயுகம்.

கடந்த ஆண்டு வெளியான பூதகாம் படத்தின் மூலம் கவனம் பெற்ற சதாவிசம் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். மம்மூட்டி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிறிஸ்டோ சேவியர் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. பான் இந்தியா அளவில் வரும் 15-ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் முழுக்க முழுக்க கருப்பு மற்றும் வெள்ளை வடிவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

MUST READ