புதுச்சேரியில் இரண்டாவது நாளாக நடிகர் விஜய்யின் கோட் படப்பிடிப்பு நடந்த நிலையில், அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
‘உங்கள் ஆதரவிற்கு நன்றி’…..மனம் நெகிழ்ந்த மறக்குமா நெஞ்சம் படக்குழுவினர்!
புதுச்சேரி நகர பகுதியில் உள்ள ஒரு பஞ்சாலையில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது நாளாக நடைபெற்றது. இதனையடுத்து, நடிகர் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பஞ்சாலை வாயிலில் குவிந்தனர்.
இதனை அறிந்த நடிகர் விஜய், படப்பிடிப்பு வாகனமான கேரோவன் மீது ஏறி, ரசிகர்கள் முன்புத் தோன்றினார். அவர்களை நோக்கி கையசைத்த அவர், தனது செல்போனில் ரசிகர்களுடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் பிற்பகல் முதலே குவியத் தொடங்கியதால் புதுச்சேரி – கடலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
‘லவ்வர்’ படம் பார்த்து பாராட்டிய உதயநிதி….. நன்றி தெரிவித்த மணிகண்டன்!
இதனால் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லக் கூடிய மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.