Homeசெய்திகள்இந்தியாபற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!

பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!

-

- Advertisement -

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.

“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

மத்திய பிரதேசம் மாநிலம், ஹர்தா என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் தீயணைப்புப் பணிகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். பட்டாசு ஆலைக்குள் உள்ள பட்டாசுகள் வெடித்து சிதறுவதால், தீயணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகின்றனர். தீயானது அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியுள்ளது. தீ பற்றி எரியும் வீடுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் சிக்கி ஆலையில் இருந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், 60- க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

“கூலித் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பா?”- மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

இந்த சூழலில், மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையில் அவரச அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

MUST READ