முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.06) காலமானார்.
பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். கடந்த 1985- ஆம் ஆண்டு பரசுராமன் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த 2014- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான டி.ஆர்.பாலு வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், பரசுராமன் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, பரசுராமன் சமீபத்தில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
குரங்கு காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு!
உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (பிப்.06) உயிரிழந்தார். அவருக்கு வயது 63. பரசுராமனின் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.