கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செல்லாத 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூபாய் 500 நோட்டுகள் மூன்று வழங்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது.
பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல நடிகர்கள்!
அந்த சுவரொட்டியில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தமது வீட்டில் இருந்த நான்கு 2,000 ரூபாய் நோட்டுகளை சென்னைக்கு சென்று ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும், 500 ரூபாய் கமிஷனில் ரூபாய் 2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொடுக்கலாம் என்ற நோக்கில் சுவரொட்டி ஒட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சுவரொட்டியால் பர்கூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.