Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

-

அதிமுக முடிவு

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக சார்பில் இன்று அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரை, திமுக மூத்த தலைவர் ஆ.ராசா விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீசெல்வம், சசிகலா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் ஆ.ராசாவை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக அறிவித்தது.

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மறைந்தாலும் மக்கள் மனதில் மன்னாதி மன்னனாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் கழகத்தின் நிறுவனர் பொன்மனச் செம்மல், கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் ‘பாரத ரத்னா’ எம்ஜிஆர் அவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக , அவரின் புகழை மறைத்து , அவமதிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் திமுகவிற்கு எதிராகவும் , அவர்களின் மூன்றாம் தர பேச்சாளர், திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரங்கெட்ட பேச்சை கண்டித்தும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழிவந்த கழகத்தின் பொதுச்செயலாளர், மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில், நீலகிரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அவிநாசி பகுதியில் கழகத்தின் சார்பில் இன்று (09.02.2024) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ