Homeசெய்திகள்தமிழ்நாடுஎலிக் காய்ச்சல் பாதிப்பு....10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

எலிக் காய்ச்சல் பாதிப்பு….10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

-

 

எலிக் காய்ச்சல் பாதிப்பு....10- க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

உசிலம்பட்டி அருகே எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஜி.ஆரை விமர்சித்த ஆ.ராசாவை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மொக்கத்தான் பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் முன்பு இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது ஆண் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மர்ம காய்ச்சலால் உசிலம்பட்டி மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக உசிலம்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!

இதற்கிடையே, மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அத்துடன், குழந்தைகளையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

MUST READ