தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் . இவர் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் பல பெரிய படங்களுக்கும் இசை அமைத்து வரும் நிலையில் டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜி வி பிரகாஷ். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள ரிபெல், கிங்ஸ்டன், டியர், கள்வன், இடி முழக்கம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் ஜி வி பிரகாஷ் மேடையில் பேசிய பேச்சு தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.”ஸ்டார் டா” என்னும் செயலி ஒன்றின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சமூக வலைத்தளங்களைப் போலவே இந்த ஸ்டார் டா ஆப் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா வாய்ப்பு தேடும் அனைவரும் இந்த ஸ்டார் டா செயலி மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சரியான வாய்ப்பை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்த விழாவில் பல்வேறு திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய ஜிவி பிரகாஷ் “சினிமா வாய்ப்பை தேடும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் இதுவரை சூதாட்டம், குளிர்பான விளம்பரங்களில் நடித்ததில்லை. கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒருபோதும் நான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். அதேசமயம் மக்களுக்கு பயன்படும் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு அம்பாஸிடராக இருந்துள்ளேன். சினிமா காணொளி இருக்கும் இளைஞர்களுக்கு எங்கு யாரை தொடர்பு கொள்வது என்று புரிதல் இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு இந்த ஸ்டார் டா செயலி மிகப்பெரிய உதவியாக இருக்கும். எதிர்காலங்களில் நான் நடிக்கும் படங்களுக்கான நடிகர், நடிகையர் தேர்வையும் இந்த செயலி மூலம் மேற்கொள்வோம்” என்றும் கூறியுள்ளார்.
- Advertisement -