சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அயலான். அதே சமயம் சிவகார்த்திகேயன், ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 21 வது படமான SK21 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக ராகுல் போஸ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சீதாராமம் பட புகழ் மிர்ணாள் தாகூர் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.
இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான புதிய அப்டேட்டுகள் கிடைத்துள்ளது. அதன்படி மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் SK23 படத்தில் வித்யூத் ஜம்வால் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வித்யூத் ஜம்வால் தமிழில் வெளியான துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.