Homeசெய்திகள்சினிமாஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

ஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பிரபல நடிகை ஊர்வசி தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். கடைசியாக ஊர்வசியின் நடிப்பில் தமிழில் வீட்டுல விசேஷம், அப்பத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஊர்வசி, J. பேபி எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்ஷா என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை விட்டாஸ் மீடியா மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஜெயந்த் சேது மாதவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய டோனி பிரிட்டோ இதற்கு இசையமைத்துள்ளார். ஊர்வசி நடிப்பில் உருவாகும் J.பேபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!கடந்த சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகின்ற மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ