Homeசெய்திகள்சினிமாவினோத் - தனுஷ் கூட்டணி உறுதி?... வந்தது புதிய அப்டேட்...

வினோத் – தனுஷ் கூட்டணி உறுதி?… வந்தது புதிய அப்டேட்…

-

- Advertisement -
வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்ட புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் எச்.வினோத். இதைத் தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இப்படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வினோத்தை முன்னணி இயக்குநராகவும் நிலை நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கினார்.

அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து 233வது படத்தை வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்தஆண்டே வெளியானது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும், படத்திலிருந்து கமல்ஹாசன் விலகுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வேறு ஹீரோக்களை வைத்து புதிய படம் இயக்க வினோத் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனுஷை வைத்து வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால், சம்பளம் தொடர்பாக இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச சம்பளத்தை தயாரிப்பு தரப்பில் தர ஒப்புக்கொண்டதால், நடிகர் தனுஷ் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து அறிவிப்பை வெளிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ